Tuesday, January 24, 2012

கெடுபிடி கூடாரத்தில் உதயசூரியன் ஒற்றர்கள்?

நமக்கு அவ்வளவா வெவரம் பத்தாதுங்க,
நம்ம வனத்துல மழைனு பெய்ஞ்சா கூட பள்ளிகொடத்துபக்கம் ஒதுங்கனது இல்லீங்க,ஏதோ நம்ம ஊட்டுகாரர் தலைவர் பண்ணைல வேலைல இருக்கறதாலயும்,மூணுவூடு தள்ளி இருக்கற பச்சியக்கா கூட ஆடுமேய்க்க மேய்ஞ்சமேடு வரைக்கும்போய் அடிக்கடி பேசிக்கிறதாலையும் ஊரு சனத்தப் பத்தி கொஞ்சம் தெரியுமுங்க.

மேய்ஞ்சமேடு பத்திதெரியாதுங்களா? நம்ம விரட்டிபசங்க கூட மாட்ட ஓட்டிட்டு அடிக்கடி வருவாங்களே!.பச்சபசேலுனு அருமையா,சிலுசிலுன்னு காத்தோட பச்சியக்கா கூட பேசிகிட்டு இருந்தா நேரம் போறதே தெரியாதுங்க.இப்படித்தான் இன்னைக்கி மேய்ஞ்சமேட்டுக்கு போனப்போ



‘இந்த ஆறுமாதமா கோட்டையில் ஆட்சிக்கு கலர் மாறினாலும்,முக்கியமான செய்திகள் டி.வி.களுக்கும் ஊடகங்களுக்கும் போகும்முன்னே எதிர்கூடாரத்துக்கு போய்விடுகிறதாம்’ என்று பச்சியக்கா சொன்னாங்க.(என்னடா சுத்ததமிழ்ல பேசுறாங்களேனு நினைக்கிறீங்களா.இவிங்க டவுனு பள்ளிகூடத்துக்குப் போய் எட்டாம் கிளாசு வரைக்கும் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காங்க அதனாலதான்.அவிங்ககூட பேசிப்பேசி நம்மளுக்கும் கொஞ்சம் ஒட்டிகிடுச்சு அதனால அதை கண்டுக்கிடாதீங்க).
எப்படிக்கா என்றேன்.பின்ன இத்தன வருசமா ஆண்டதுக்கு இதுகூட இல்லைன எப்படி என்று சொல்லிவிட்டு,தனிச்செயலாளர்களாவும்,வாகன ஓட்டிகளாவும் உள்ளவர்கள்தான் அரசுபத்தின அத்தன தகவல்களையும் சிந்தாம சிதராம எதிர்கூடாரத்துக்கு கொடுப்பதாம்.



தமிழக தலைமைசெயலகத்தில் பொதுதுறையில் பொறுப்பில் உள்ள வசந்தி,பெரியநாயகி,அம்பலவாணன் ஆகிய இந்த மூவர்தான் இந்த சந்தேக வலையில் சிக்கியுள்ளனராம்.இவர்கள்தான் அமைச்சர்களுக்கு யார் தனிச்செயலாளர்களாவும்,வாகன ஓட்டிகளாவுமாக ஆகப்போவது என தீர்மானிக்கும் சக்திகளாம் என்றார்.

இந்த அம்மாகிட்டேயே இப்படியெல்லாம் செய்றதுக்கு எப்படித்தான் துணிச்சல்வருதோ தெரியல என்றேன்.



மேல சொல்றேன் கேளு,சமீபத்திய சங்கதி என்னனா திமுக அமைச்சர் உபையதுல்லாவுக்கு தனிச்செயலாளராக இருந்த சுருளிவேல்ராஜன் என்பவரை வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்த்துவிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளாராம் வசந்தி என்று பச்சியக்கா சொல்லி முடிக்கவும்,ஏங்க்கா இத்தன விசியமும் அந்த அம்மா காதுக்குப் போகமலா இருக்கும் என்றேன் அதான் தலைமைசெயலக ஊழியர்களுக்கே குழப்பமா இருக்காம் புள்ள,விசயம் போயிருந்தா இந்நேரம் எஸ்மா டெஸ்மா குஷ்மானு ஏதாவது அவங்க மேல பாய்ந்திருக்கும்.என்னமோ!

இருட்டுகட்டுது கிளம்பு புள்ள போலாம் என்றார்.சரி என்று நானும் கிளம்பினேன்.போகும்பொது எங்கிருந்துகா இதையெல்லாம் புடிக்கிற  என்று கேட்டேன்.நதி மூலம்,ரிஷி மூலம்லாம் கேட்க கூடாது என்றார்,அது நதிக்கும் ரிஷிக்கும் தான்,நீங்க சொல்லுங்க என்றேன்.சரி சரி இதோ பார் என்று மூலத்தைக் காண்பித்தார்.அதைப் பார்த்துக்கொண்டே நடந்ததில் வீடே வந்துவிட்டது.வருகிறேன் என்று கூறிவிட்டு,இரவு சமையலுக்கு என்னத்த செய்யஎன யோசிக்கலானேன்.

-குப்பாயி

0 comments:

Post a Comment