Wednesday, December 21, 2011

ஜனவரி ஏன் ஜனவரி ?

ஜனவரி : இது கதவுகளின் ரோமனியக்கடவுளான ஜனசை குறிக்கும் மாதம்.இவருக்கு முகம் நேரெதிர் திசைகளை நோக்கியவாறு இருக்கும்,ரோமன் நம்பிக்கைப்படி ஒரு கழியும் வருடத்தையும் மறு முகம் புதிய வருடத்தையும் பர்க்கிரதாம் ஜனஸ் கடவுள்.



பிப்ரவரி:இது பிப்ரவரியஸ் எனும் ஒரு பழைய ரோமன் புனிதப்படுத்தல் பண்டிகையின் நினைவு.பின்னாளில் இதை அவர்கள் லுபெற்காலியா எனும் பேரில் வழங்கினர்.என்ன செய்வார்கள் இந்த விழாவின் போது ? பலதின் மலை  எனும் இடத்தில் மக்கள் கூடுவார்களாம்.ஆடுகளையும்,இள நாய்களையும் குருமார்கள் பானுஸ் எனும் கடவுளுக்கு பலிகொடுப்பார்களாம்.
அந்த குருதியை பெரிய இடத்து இளைஞர்களின் நெற்றியில் பூசிவிடுவார்களாம், பாலில் தோய்ந்த கம்பளியால் அதை துடைத்து விட்டு பலியாட்டின் தோலை இடுப்பில் கௌபீனமாய் கட்டிக்கொல்வார்களாம் .பிறகு அந்த மலையை சுற்றி ஓடி சிறு பட்டையால் எதிர் வருபவர்களைக் குறிப்பாக பெண்களைத்  தட்டுவார்களாம் .காரணம் இதன்மூலம் புனிதம் அடைந்து நன்மக்கட்பேறு பெறுவார்களாம் .
இடுப்பில் கௌபீனமாய் கட்டியிருந்தார்களே பலிஆட்டுத் தோல் அதன் பேர் தான் பிப்ர அதாவது லத்தினத்தில் புனிதத் தன்மை பெற்றது என்று பொருள்  ,இதிலிருந்து பிப்ரவரியஸ் வந்தது,பிப்ரவரிபிறந்தது இப்படித்தான்.

மார்ச் : ரோமன் போரக்கடவுள் மார்ஸ் பேரால் வந்தது.
ஏப்ரல்: லத்தினின் எபெரிர் எனும் சொல்லே மூலம் .இதன் பொருள் திறத்தல், மலர்தல். செடி,கொடிகள் பூக்கும் வசந்த காலத்தின் மாதம்

மே:ரோமன் மேய எனும் வளர்ச்சிகளின் கடவுளால் பிறந்த மாதம். 
இன்னொரு வாதம் முதியோர்களைப்போற்றும் விதமாக , மேயோர்ஸ் என்னும்  முதியோர்களை குறிக்கும் சொல்லால் கூட மே மாதம் வந்திருக்கலாம் என்பது

ஜூன் : ஜுனிஸ் எனும் இளைஞர்களைக்  குறிக்கும் சொல்லாலோ ஜூனோ எனும் ரோமன் கடவுளாலோ வந்திருக்கலாம் .
ஜூலை:ஜூலியஸ் சீசரின் பெயரால் பிறந்த மாதம். கி.மு 44 மார்க் அந்தோனி அந்த பெயரை இட்டார்.அதன் முன்பு குயன்டிளிஸ் என்று அழைத்தார்கள்.இதற்கு ஐந்து என பொருள்.ரோமனியர்களுக்கு மார்ச் தான் முதல் மாதம் .இது ஐந்தாவதாக வருவதால் அந்த எண்ணையே பெயராக வைத்திருந்தார்களாம்.
ஆகஸ்ட் :ரோமப் பேரரசை ஆண்ட அகஸ்ட்டஸ் ஐ குறிக்கும் மாதம் . இவரின் இயற்பெயர் கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் .இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஒக்டேவியஸ் கிமு 27 ஆம் ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்ட பின்னர் கிமு 43ல் ஒக்டேவியஸ், மார்க் ஆன்டனி, மார்க்கஸ் ஏமிலஸ் லெப்பிடஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக் கொண்டு ஒரு இராணுவச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.அதிகாரப் போட்டி காரணமாக இம் முக்கூட்டணி சிதைந்து போயிற்று. லெப்பிடஸ் நாடுகடத்தப்பட்டார். கிமு 31 ஆம் ஆண்டில் ஒக்டேவியனுடன் ஆக்டியப் போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மார்க் ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். மூலம் குடியரசாக இருந்த ரோம், ஒரு தனி மனிதனின் ஆளுகைக்கு உட்பட்டுப் பின்னர் ரோமப் பேரரசு ஆனது. ஜனவரி  17, 27 B.C இல் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியசுக்கு வணங்கப்படக்கூடிய மன்னர் என்னும் பொருளுடைய அகஸ்ட்டஸ்  என்னும் பட்டம் அளிக்கப்பட்டது.

செப்டம்பர்:செப்டெம் எனும் ஏழாம் எண்ணைக் குறிக்கும் சொல்லால் வந்த மாதம்.ரோமன் முறைப்படி செப்டம்பர் ஏழாம் மாதம்

ரோமன் முறைப்படி நவம்பர் டிசம்பர் மாதங்கள் முறையே நவம் மற்றும் டிசம் எனும் ஒன்பது மற்றும் பத்தாவது எண்ணைக் குறிக்கும் சொல்லல் வந்த மாதங்கள் .

0 comments:

Post a Comment